மாதாஅம்மா ஜெபமாலை ஜெபிப்போம். இந்த உலகத்தில் திருப்பலிக்கு அடுத்து மிகவும் உன்னதமான ஜெபம் ஜெபமாலை ஆகும். ஜெபமாலை ஜெபிக்க பட வேண்டும்.ஜெபமாலை சொல்லப்பட கூடாது . முழு கவனத்தோடு முடித்தவரை மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் .பக்தியுடன் சொல்லப்படும் ஒரு அருள் நிறைந்த மந்திரத்தால் இந்த உலகையே மாற்றலாம் என்று புனிதர்கள் கூறுகிறார்கள்.முடிந்த வரை பய பக்தியுடன் ஜெபமாலை ஜெபிப்போம். ஜெபமாலை தொடங்கும் முன் தூய ஆவி ஆண்டவர் ஜெபம் ஜெபித்த பின்னர் ஆரம்பிக்கவேண்டும் . பக்தியுடன் ஜெபிக்க புனிதர்கள் மற்றும் காவல் சம்மனசானவரின் உதைவியை கேட்க வேண்டும் . நம்முடைய பாரம்பரிய முறை படி 153 மணி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.இப்பொது நமக்கு ஒளியின் மறை உண்மைகளும் ஜெபமாலையில் புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் சேர்க்கப்பட்டுள்ளது . அதையும் நாம் சேர்த்து ஜெபிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும் 53 மணி ஜெபமாலை மிகவும் சிறிய பலனை தரும். முழு ஜெபமாலை ஜெபிக்கும் போது நமக்கு முழு பலன் கிடைக்கும். இந்த உலகத்தில் சாத்தானின் சோதனைகளை மேற்கொள்ள நமக்கு முழு ஜெபமாலை தான் பலன் கொடுக்கும். பு...
மாதா அம்மாவின் வழியாக விண்ணகம் செல்வதற்கான ஒரு சிறிய ஏணி படி தான் இந்த தளம். மாதா அம்மா நாம் இறை இயேசு வழியாக விண்ணகம் செல்ல உதவுவார் ! மரியே வாழ்க