மாதாஅம்மா
ஜெபமாலை ஜெபிப்போம்.
இந்த உலகத்தில் திருப்பலிக்கு அடுத்து மிகவும் உன்னதமான ஜெபம் ஜெபமாலை ஆகும்.
ஜெபமாலை ஜெபிக்க பட வேண்டும்.ஜெபமாலை சொல்லப்பட கூடாது . முழு கவனத்தோடு முடித்தவரை மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் .பக்தியுடன் சொல்லப்படும் ஒரு அருள் நிறைந்த மந்திரத்தால் இந்த உலகையே மாற்றலாம் என்று புனிதர்கள் கூறுகிறார்கள்.முடிந்த வரை பய பக்தியுடன் ஜெபமாலை ஜெபிப்போம். ஜெபமாலை தொடங்கும் முன் தூய ஆவி ஆண்டவர் ஜெபம் ஜெபித்த பின்னர் ஆரம்பிக்கவேண்டும் . பக்தியுடன் ஜெபிக்க புனிதர்கள் மற்றும் காவல் சம்மனசானவரின் உதைவியை கேட்க வேண்டும் .
நம்முடைய பாரம்பரிய முறை படி 153 மணி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.இப்பொது நமக்கு ஒளியின் மறை உண்மைகளும் ஜெபமாலையில் புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் சேர்க்கப்பட்டுள்ளது . அதையும் நாம் சேர்த்து ஜெபிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும் 53 மணி ஜெபமாலை மிகவும் சிறிய பலனை தரும். முழு ஜெபமாலை ஜெபிக்கும் போது நமக்கு முழு பலன் கிடைக்கும். இந்த உலகத்தில் சாத்தானின் சோதனைகளை மேற்கொள்ள நமக்கு முழு ஜெபமாலை தான் பலன் கொடுக்கும். புனித பியோ, புனித குழந்தை தெரேசாம்மாள், பாத்திமா புனித சிறுவர்கள் , மரிய மான்போர்ட் போன்றவர்கள் முழு ஜெபமாலை ஜெபித்தவர்கள்.
53 மணி ஜெபமாலை சிறுவர்கள் ஜெபமாலை. நாம் முடித்த வரை முழு ஜெபமாலை ஜெபித்து புனிதர்களை போல் முழு பலன் பெற வேண்டும் .
அருள் நிறைந்த மந்திரைத்தை திரும்ப திரும்ப சொல்லுவதால் நமக்கு என்ன பலன் ?
அருள் நிறைந்த மரியே ஜெபத்தில் நாம் மூவொரு இறைவனை மகிமை படுத்துகிறோம் "அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே" என்ற வார்த்தை தந்தையாம் கடவுளிடம் இருந்து வந்த வார்த்தை. இவ்வார்த்தையால் தான் ஆண்டவர் ஏசு கிறிஸ்து இந்த உலகிற்க்கு மனிதனாக தூய ஆவியானவர் வழியாக பிறந்தார். நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு அருள் நிறைந்த ஜெபமும் மூவொரு கடவுளை நினைத்து அவர்களை மகிமைப்படுத்தி புகழ்வதாகும். அருள்நிறை மந்திரத்தின் முதல் பாகத்தை மிகப் பரிசுத்த திரித்துவ தேவன் நமக்கு வெளிப்பபடுத்தினார். அதன் பிந்திய பாகத்தை அர்ச். எலிசபெத் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு உரைத்தார்கள் . இம்மந்திரத்தின் முடிவுரையை 430-ம் ஆண்டில் திருச்சபை நமக்குத் தந்தது. வேத சாட்சிகளுக்கு தளராத உறுதியையும் பலத்தையும் அளிப்பது இம்மங்கள வார்த்தை ஜெபமே. இதுவே பசாசுக்களுக்கு அச்சம் விளைத்து அவர்களை வெட்கத்துக்குட்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது.
அருள் நிறை மந்திரத்தை நாம் தகுந்தவாறு ஜெபிப்போமானால் , அதுவே நாம் சேசுவையும், மரியாயையும் நேசித்து வாழ்த்தி மகிமைப்படுத்துவ தாகுமல்லவா?
ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திலும் நாம் சேசுவையும் மரியாயையும் வாழ்த்துகிறோம்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே என்று கூறுகிறோம்.அருள் நிறை மந்திரத்தால் நாம் மரியன்னையை வாழ்த்தும்போது அவ்வன்னை அருள் வரங்களால் நம்மை நிரப்புகிறார்கள் என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். மாமரி அன்னையின் வாழ்த்தொலி எலிசபெத்தின் காதில் ஒலித்த போது அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அவர்கள் உதரத்திலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளிற்று. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட அர்ச் எலிசபெத்து போல் நாமும் இந்த வாழ்த்துரை ஜெபிக்கும் போதெல்லாம் ஆட்கொள்ளப்படுவோம் .
இத்தகைய அற்புதமான ஜெபமாலை ஜெபித்து நாம் முழு பலனை அடைவோம்.
ஒரு நாளும் நமது மாதா அம்மாவை மறக்க வேண்டாம். ஜெபமாலை ஜெபிக்காமல் இருக்க வேண்டாம்.
முழு ஜெபமாலை ஜெபிப்போம். நம்மையே இந்த கொடிய உலக ஆசையில் இருந்து சாத்தானின் சோதனையில் இருந்து காத்துக்கொள்வோம் மாதா அம்மா வழியாக ஏசுவுக்கு நம்மையும் நம் குடும்பங்களையும் ஒப்பு கொடுப்போம் . யேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க !

Comments
Post a Comment