புனித சுசையப்பர் அகில திருசபைக்கு பாதுகாவலராக நூற்றி ஐம்பதாவது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார் . 1870 ம் ஆண்டு முத்தி பேறுபெற்ற போப் ஒன்பதாம் பியூஸ் அவர்கள் அறிவித்தார்கள் . இதை நினைவுகூறும் விதமாக போப் பிரான்சிஸ் இந்த வருடத்தை 2021 புனித சூசையப்பர் வருடமாக அறிவித்துள்ளார் . போப் குறிப்பிடும் பொது ‘சூசையப்பர் ஒரு அன்பான தந்தை பணிவுள்ள தந்தை அன்புள்ள தந்தை , முக்கியமான பங்கு வகித்தவர் நம் யேசுவின் வாழ்வில்’ என்று சொல்கின்றார் . இறைவன் , தன் மகனை முன்மாதிரிகையாக வளர்க்கும் பொறுப்பையும் , அருளையும் , ஆசியையும் புனித சூசையப்பருக்கு வழங்கினார் . தூய . மரியன்னைக்கு அளித்த உயர்வை விடவும் புனித சூசையப்பருக்கு அளித்த நீதிமான் என்ற உயர்வு , வானுலகிலும் பூவுலகிலும் , யாருக்கும் வழங்கப்படவில்லை . அதனால் புனித சூசையப்பர் வானதூதர்களைவிடவும் , தூயவர்களைவிடவும் மேலானவரென வேத வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர் . புனித சூசையப்பர் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து , தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மிக நன்றாக செய்துமுடித்தார் . அவர் பொறுமை , நம்பிக்கை , விசுவாசம் , இறைஅன்பு , பணிவு ஆகிய நற்...
மாதா அம்மாவின் வழியாக விண்ணகம் செல்வதற்கான ஒரு சிறிய ஏணி படி தான் இந்த தளம். மாதா அம்மா நாம் இறை இயேசு வழியாக விண்ணகம் செல்ல உதவுவார் ! மரியே வாழ்க