புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும் . இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் " பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி " (Basilica Sancti Petri) என்றும் , இத்தாலிய மொழியில் " பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ " (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும் . உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே . உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர் . கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு . இப்பேராலயத்தின் கீழ்ப் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது . சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும் , உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு . எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார் . புனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்க...
மாதா அம்மாவின் வழியாக விண்ணகம் செல்வதற்கான ஒரு சிறிய ஏணி படி தான் இந்த தளம். மாதா அம்மா நாம் இறை இயேசு வழியாக விண்ணகம் செல்ல உதவுவார் ! மரியே வாழ்க