Skip to main content

Posts

Showing posts from December, 2021

அற்புத அகுஸ்தினார் குழந்தை இயேசு - ஜெர்மனி

ஜெர்மன் நாட்டில் இருக்கிற முனிச் நகரத்தில் மட்டும் ஒரு சிறப்பான பெரிய குழந்தை இயேசு சொரூபம் இருக்கு . அந்தக் குழந்தை இயேசுவை ஒவ்வொரு தடவையும் கிறிஸ்மஸ் அப்பதான் வெளியே எடுத்து வைப்பாங்க . அந்த அதிசய குழந்தை இயேசுவை பற்றி தான் பார்க்கப் போறோம் . இந்த குழந்தை இயேசு சிறப்பும் 1624 அகுஸ்தினார் சபை காரங்க வைத்திருந்த சொரூபம் . அகுஸ்தினார் சபையில் இருந்த குரு ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தை இயேசுவே இரவு எடுத்து கையில் வைத்து தாலாட்டி ஜெபம் பண்ணுவார் . இப்படி யாருக்கும் தெரியாமல் அவர் செஞ்சுகிட்டு வந்தாரு . அப்படி ஒரு நாளு அந்த சொரூபம் தவறி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது அந்த குருவானவர் அந்த உடைந்த துண்டுகளை உள்ள வச்சுட்டு கடவுளிடம் ஜெபம் பண்ணினார் . எப்படியாவது இந்த சொரூபம் திரும்ப பழையபடி வந்துடனும் கடவுளே என்று ஜெபம் பண்ணினார் . கிறிஸ்துமஸ் சமயம் நெருங்கி வந்ததால் சபையில இருக்கிற குருக்கள் அனைவரும் பாவசங்கீர்த்தனம் செய்யணும் . அப்ப அந்த குருவானவர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் பாவசங்கீர்த்தனம்தில் சொன்னாரு . உடனே குருக்கள் போயி அந்த சொரூபத்தை திறந...

பதுவை நகர அந்தோனியார் பேராலயம் , பதுவை, இத்தாலி

  பதுவை நகர அந்தோனியார் பேராலயம் | பதுவை இத்தாலி | St Anthony Basilica | Italy பதுவைப் ஊரில் புதுமைகள் செய்து நல்லுரையாற்றி , தவறினை சுட்டிக்காட்டி ஞான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அந்தோனியார் . தாயகம் போர்ச்சுக்கல் பிறந்த ஊர் லிஸ்பன் சேர்ந்தது அகஸ்தீனார் மடம் புகுந்தது கப்பூச்சின் சபை விரும்பியது வேத சாட்சியாக ஆனது மறை போதகராக உரிமை கொண்டாடியது பதுவை மாநகர் இவை யாவும் தேவ திருவுளம் . அவர் பதுவா நகரில் மூன்று ஆண்டுகளே திருத்தொண்டாற்றினார் . பதுவா நகர் அவரால் அனைத்துலகப் புகழ் பெற்றது . அந்தோனியார் கடைசி கால கட்டத்தில் ' நான் இங்குள்ள சகோதரர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை பதுவை தூய மரியன்னை மடம் செல்ல விரும்புகிறேன் '' என்றார் . சகோதரர்கள் உடன்படவில்லை . அவரின் அடுத்தடுத்த விண்ணப்பம் அவர்களை உடன்பட வைத்தது . ஒரு வண்டியில் ஏற்றி பதுவா ஊரை நோக்கி விரைந்தனர் . 1231 - ஆம் வருடம் ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் நிகழ்ந்தது . அன்று அவருக்கு வயது 36. அந்தோனியார் இறபதற்கு முன்னால் பதுவை நகரச் சிறுவர்களின் வாய்களைத் திறந்தார் , அவர்கள் வீதிகளில் அங்குமிங்கும் ஓடி ,...