பதுவை நகர அந்தோனியார் பேராலயம் | பதுவை இத்தாலி | St Anthony Basilica | Italy
பதுவைப் ஊரில் புதுமைகள் செய்து நல்லுரையாற்றி, தவறினை சுட்டிக்காட்டி ஞான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அந்தோனியார். தாயகம் போர்ச்சுக்கல் பிறந்த ஊர் லிஸ்பன் சேர்ந்தது அகஸ்தீனார் மடம் புகுந்தது கப்பூச்சின் சபை விரும்பியது வேத சாட்சியாக ஆனது மறை போதகராக உரிமை கொண்டாடியது பதுவை மாநகர் இவை யாவும் தேவ திருவுளம்.
அவர் பதுவா நகரில் மூன்று ஆண்டுகளே திருத்தொண்டாற்றினார். பதுவா நகர் அவரால் அனைத்துலகப் புகழ் பெற்றது.
அந்தோனியார் கடைசி கால கட்டத்தில் 'நான் இங்குள்ள சகோதரர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை பதுவை தூய மரியன்னை மடம் செல்ல விரும்புகிறேன்'' என்றார். சகோதரர்கள் உடன்படவில்லை. அவரின் அடுத்தடுத்த விண்ணப்பம் அவர்களை உடன்பட வைத்தது. ஒரு வண்டியில் ஏற்றி பதுவா ஊரை நோக்கி விரைந்தனர்.
1231 - ஆம் வருடம் ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் நிகழ்ந்தது. அன்று அவருக்கு வயது 36. அந்தோனியார் இறபதற்கு முன்னால் பதுவை நகரச் சிறுவர்களின் வாய்களைத் திறந்தார், அவர்கள் வீதிகளில் அங்குமிங்கும் ஓடி, "தூய பிதா இறந்தார். | அந்தோனியார் இறந்துவிட்டார்!” எனச் சொல்லித் திரும்பினர்.
இறந்த பொழுது பதுவை ஆலயமணிகளும், லிஸ்பன் ஆலயமணிகளும் ஒலித்தன. பாலகர்களின் வாய்மொழியைக் கேட்ட மக்கள் தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அதிர்ச்சியுடனும், தாங்க இயலாத மன வருத்தத்துடனும் மடம் சென்றனர்,
தான் இறந்தபின் தன்னைப் பதுவை மடத்துக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கஞ் செய்ய வேண்டுமென்று அந்தோனியார் கூறி இருந்தார்.
ஜூன் மாதம் 17ம் நாள் நல்லடக்கத்துக்காக ஊர்வலமாக எடுத்துச் சென்ற புனிதரின் உடலின் முன் மக்கள் எரியும் திரிஏந்திச் சென்றனர். துறவிகளின் ஆலயத்தில் ஆயர் திருப்பலி நிறைவேற்றிய பின் அடக்கம் நடைபெற்றது.
அந்தோனியார் பிரேதப் பெட்டியைத் தொட்ட பலர் குணமடைந்தனர். ஊமைகள் பேசினர். செவிடர்கள் கேட்டனர். குருடர்கள் பார்வையடைந்தனர். தீராப் பிணிகள் தீர்ந்தன. கேட்டவரங்களை மக்கள் அடைந்தார்கள். அவரின் அடக்க நாளில் இவ்வாறு பல புதுமைகள் நடந்தன.
அந்தோனியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட ஆலயத்தை 1232-ல் மாபெரும் ஆலயமாக கட்டும் பணி தொடங்கப்பட்டது. (இப் பேராலயம் கட்டி முடித்திட 100 ஆண்டுகள் ஆயிற்று) அந்தோனியாரின் முதல் அடக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட பெட்டியினை இங்கு காணலாம்.
இந்த பசிலிகாவில் புனிதரின் கல்லறை,தாடை மற்றும் அவரது நாக்கு உள்ளது.மேலும் பல புனிதரின் அருளிறகங்கள் இந்தபசிளிகாவின் உள்ளில் உள்ள பொக்கிச பகுதயில் உள்ளது.
Comments
Post a Comment