புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும் . இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் " பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி " (Basilica Sancti Petri) என்றும் , இத்தாலிய மொழியில் " பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ " (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும் . உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே . உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர் . கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு . இப்பேராலயத்தின் கீழ்ப் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது . சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும் , உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு . எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார் . புனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்க...
ஜெர்மன் நாட்டில் இருக்கிற முனிச் நகரத்தில் மட்டும் ஒரு சிறப்பான பெரிய குழந்தை இயேசு சொரூபம் இருக்கு . அந்தக் குழந்தை இயேசுவை ஒவ்வொரு தடவையும் கிறிஸ்மஸ் அப்பதான் வெளியே எடுத்து வைப்பாங்க . அந்த அதிசய குழந்தை இயேசுவை பற்றி தான் பார்க்கப் போறோம் . இந்த குழந்தை இயேசு சிறப்பும் 1624 அகுஸ்தினார் சபை காரங்க வைத்திருந்த சொரூபம் . அகுஸ்தினார் சபையில் இருந்த குரு ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தை இயேசுவே இரவு எடுத்து கையில் வைத்து தாலாட்டி ஜெபம் பண்ணுவார் . இப்படி யாருக்கும் தெரியாமல் அவர் செஞ்சுகிட்டு வந்தாரு . அப்படி ஒரு நாளு அந்த சொரூபம் தவறி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது அந்த குருவானவர் அந்த உடைந்த துண்டுகளை உள்ள வச்சுட்டு கடவுளிடம் ஜெபம் பண்ணினார் . எப்படியாவது இந்த சொரூபம் திரும்ப பழையபடி வந்துடனும் கடவுளே என்று ஜெபம் பண்ணினார் . கிறிஸ்துமஸ் சமயம் நெருங்கி வந்ததால் சபையில இருக்கிற குருக்கள் அனைவரும் பாவசங்கீர்த்தனம் செய்யணும் . அப்ப அந்த குருவானவர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் பாவசங்கீர்த்தனம்தில் சொன்னாரு . உடனே குருக்கள் போயி அந்த சொரூபத்தை திறந...